ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் செலவு செய்ய மாட்டாரா? கமலுக்கு கஸ்தூரி கண்டனம்!

ஒரு உயிருக்கு ஒரு மணி நேரம் செலவு செய்ய மாட்டாரா? கமலுக்கு கஸ்தூரி கண்டனம்!

சமீபத்தில் நிகழ்ந்த ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை செய்ய கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அந்த சம்மனை ஏற்று கமலஹாசன் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜரானார்

அவரிடம் சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் பேட்டியளித்த கமல்ஹாசன் விசாரணை குறித்து எதையும் கூறாமல் சம்பந்தமில்லாமல் பேசினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவரது கட்சியில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கமலஹாசனை விசாரணைக்கு அழைத்தால் போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும்.

Leave a Reply

Your email address will not be published.