வடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபுரா மாவட்ட குரேஸ் பகுதியை சேர்ந்த ஷபீகா பானு மற்றும் தில்ஷதா பானு. இவர்களுக்கு முறையே 18 மற்றும் 16 வயதாகிறது. அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிய வேளையில் இந்த இளம்பெண்கள் இருவரும், அருகிலுள்ள கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுக்க சென்றனர்.

கிஷன்கங்கா ஆற்றில் இவர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென மலையின் மேல் பகுதியில் படிந்திருந்த பனிக்கட்டிகள் சரியத்தொடங்கியது. அந்த பனிச்சரிவில் சிக்கிய அவர்கள் பனியில் புதைந்து பலியாயினர்.

தண்ணீர் எடுக்க சென்ற இளம்பெண்கள், மாலை வரை வீடு திரும்பாததால், அவர்களை தேட ஆரம்பித்த மீட்பு குழுவினர், தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்களில் தில்ஷதா பானுவின் சடலம் மீட்கப்பட்டது, ஷபீகா பானுவின் சடலம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரமாக அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply