டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு. ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்

டிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு. ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூர் சிறைக்கு செல்வதற்கு முன்னர் தனது சகோதரி மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்தார்.

இதனால் அதிமுகவினர் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சசிகலாவின் குடும்பம்தான் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பில் இருந்தும் வெளிப்பட்டு வரும் நிலையில் தற்போது அதை உறுதி செய்வதைப்போல் தனது உறவினருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளதால் பெரும்பாலான சீனியர் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அமைப்பு செயலாளர் பதவியை கருப்பசாமி பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ஆதரவாளர்களுடன் கலந்துபேசி ஓபிஎஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.