ஜாமீனில் விடுதலை ஆனார் கருணாஸ்

ஜாமீனில் விடுதலை ஆனார் கருணாஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஊர்வலம் நடத்தியது என 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த இரண்டு வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களள சந்தித்த கருணாஸ், ‘தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டதால் கைது செய்யப்பட்டதாகாவும், தன் மீது போடப்பட்ட வழக்கில் உண்மை நின்றது, நீதி வென்றதாகவும் அவர் கூறினார்.

நிபந்தனை ஜாமீன் பெற்ற கருணாஸ் இன்னும் 30 நாட்களுக்கு சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply