shadow

கமலுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு கருணாஸ் உயர்ந்துவிட்டாரா? நெட்டிசன்கள் கிண்டல்

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அவரை சுற்றி இருக்கும் நண்பர்கள் கூட்டத்தின் ஒருவராக கருணாஸ் நடித்திருப்பார். ஆனால் இன்று அவருக்கே ஆலோசனை கூறும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதற்கு காரணம் நேற்று கருணாஸ் கொடுத்த பேட்டிதான். அப்படி என்னதான் கருணாஸ் அந்த பேட்டியில் கூறினார் என்பதை பார்ப்போம்

கமல்ஹாசன் அவர்கள் மிகச்சிறந்த ஒரு நடிகர் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு இருக்க முடியாது. சிலகாலமாக அரசியல் குறித்து அவருடைய கருத்துக்களும் இந்த அரசாங்கத்தின் மீதான அவருடைய கோபமும், அரசுத்துறைகள் சரியாக இல்லை என்ற அவருடைய குற்றச்சாட்டுக்களையும் கவனித்து கொண்டு வருகின்றேன்.

நான் அவரிடத்தில் வைக்கும் ஒரு வேண்டுகோள், ‘சரியில்லை என்றால் அதை சரி செய்வதற்கான கடமை உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு. உங்களுக்கு அதில் அதிக நாட்டம் உண்டு. இந்த அரசோ, இந்த அரசின் நடவடிக்கைகளோ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக களத்தில் இறங்கி போராடலாம்’

இவ்வாறு கருணாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply