கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை குறிவைத்தது சிபிஐ. திமுக அதிர்ச்சி

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை குறிவைத்தது சிபிஐ. திமுக அதிர்ச்சி

karunanidhiகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகள், அவரின் உறவினர், நண்பர் வீடுகள் ஆகியவற்றில் 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தி ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் தஸ்தாவேஜ்களை கைப்பற்றிய நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர்  சண்முகநாதனை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கருணாநிதிக்கு உதவியாளராக இருந்து வரும் சண்முகநாதன், முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டுடன், உரையாடியது குறித்து விசாரணை செய்ய அழைக்கப்பட்டுள்ளார் என கூறபடுகிறது.

சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் கருணாநிதியின் மிக நெருங்கிய ஒருவர் கொண்டுவரப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் திமுக புள்ளிகளை குறிவைத்து சிபிஐ மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.