shadow

மருத்துவமனையில் கருணாநிதி-சோ சந்திப்பு

choநகைச்சுவை நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகம் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர் என விளங்கி வரும் துக்ளக் ஆசிரியர் சோ கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வரும் நிலையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் திமுகவின் முக்கிய தலைவர்களான ஆ.ராசா, துரைமுருகன் ஆகியோர்களும் உடனிருந்தனர்.

மேலும் இதே மருத்துவமனையில்தான் கருணாநிதியின் மகள் கனிமொழி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தைராய்டு அறுவை சிகிச்சை செய்ய அட்மிட் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தாயார் ராஜாத்தி அம்மாள் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

Leave a Reply