shadow

கருணாநிதி உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த ரஜினி

karunanidhiதி.மு.க தலைவர் கருணாநிதி ‘ஒவ்வாமை’ நோய் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருணாநிதியின் மகனும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு அவர் நலமுடன் வீடு திரும்ப தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துகொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நாளை கருணாநிதி வீடு திரும்பினாலும் இன்னும் ஒருசில நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் முழு ஓய்வு எடுப்பார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply