சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி! 

சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி! 

திமுக தலைவர் கருணாநிதி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவருக்கு மருத்துவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் கருணாநிதிக்கு டிரக்கியாஸ்டமி கருவி அகற்றப்பட்டு 4வது முறையாக புதிய குழாய் பொருத்தப்படவுள்ளதாகவும் அதனால் இன்று மாலை அல்லது இரவில் அவர் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 

கருணாநிதியுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா உள்ளிட்டோர் கருணாநிதியுடன் மருத்துவமனையில்  உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published.