shadow

கருணாநிதி மகள் மீதான மோசடி வழக்கில் சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு

selviதிமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர் மீது மோசடி மனு ஒன்றை சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த வி.நெடுமாறன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில் செல்வி மற்றும்அவரது மருமகன் வி.எம்.ஜோதிமணி ஆகியோர், செங்கல்பட்டு அருகே தாழம்பூர் கிராமத்தில் தங்களது சொந்தமான 2.94 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக என்னிடம் கூறினர்.

இதையடுத்து, அந்த நிலத்திற்கு  ரூ.5.14 கோடிக்கு விலைபேசி, முதல்கட்டமாக ரூ.3.50 கோடி செக் மற்றும் ரொக்கமாக கடந்த 2007ஆம் ஆண்டு கொடுத்தேன். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் எனக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை. இதையடுத்து, பணத்தை திரும்ப கேட்டபோது, செக் ஒன்றை தந்தனர். அதை வங்கியில் செலுத்தியபோது, அந்த செக் போதிய பணம் இல்லாததால் திரும்ப வந்து விட்டது.

இதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு பணத்தை திரும்ப கேட்டு சென்றபோது, கருணாநிதி மகள் செல்வி என்னை மிரட்டினார். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் ”மனுதாரர் மிரட்டியதாக கூறிய அன்றைய தினம் நான் சென்னையில் இல்லை என்றும் அன்றைய தினம் காலையில் கொல்கத்தாவுக்கு சென்று விட்டு, இரவுதான் சென்னை திரும்பியதாகவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்றும் எனவே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் செல்வி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி டி.சி.செலவ்ம், இந்த வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வியை விடுவித்து உத்தரவிட்டார்.

selvi1

Leave a Reply