ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., விதிகளை மீறி வெற்றி பெற்றுள்ளது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வெற்றி பெற்றுள்ளது.

ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்களுக்கு தாராளமாக அ.தி.மு.க., இடமளித்ததன் காரணமாக இந்த வெற்றியை அ.தி.மு.க. பெற்றுள்ளது. என்ன விலை கொடுத்து அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

தேர்தல் விதிமுறைகளை சுட்டிக்காட்டியும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. 4 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி லோக்சபா தேர்தலில் தொடருமா என்ற யூகத்திற்கு பதிலளிக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வரும் தேர்தலில் நோட்டா முறையை தேர்தல் ஆணையம் தொடருமா என தெரியவில்லை என கூறினார்.

Leave a Reply