shadow

அரசு பாடத்திட்டத்தில் கருணாநிதி வாழ்க்கை? அமைச்சர் பதில்

திமுக தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக இருந்த கருணாநிதிக்கு தினந்தோறும் அஞ்சலி, நினைவேந்தல் கூட்டம் ஆகியவை திமுக சார்பில் நடந்து வருகிறது. மேலும் கருணாநிதிக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்றும், அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அரசு பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒருசிலர் எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ‘திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையை பாடமாக சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்றும், கருணாநிதி படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அரசு தடையாக இருக்காது என்றும் கூறியுள்ளார். எனவே நாளை நடைபெறும் பொதுக்குழுவில் இதுகுறித்த கோரிக்கை அரசுக்கு வைக்கப்படும் என தெரிகிறது

 

Leave a Reply