கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த திமுகவின் தென்மண்டல அமைப்பாளரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக உருப்படாது என ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

தேமுதிக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவரும் இந்த நேரத்தில் அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அழகிரியின் பேட்டி கருணாநிதிக்கு கோபத்தை தந்தது. எனவே நேற்று கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யார் கருத்து தெரிவித்தாலும் கட்சி விரோத நடவடிக்கையின் மூலம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட வேண்டிய நிலை வரும் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் திமுக கட்சியினரிடையே பெரும் பதட்டம் நிலவியது.

இந்நிலையில் இன்று காலை மதுரையில் இருந்து திடீரென சென்னை வந்த மு.க. அழகிரி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். தனது பேட்டி அந்த பத்திரிகையில் திரித்து வந்ததாகவும் அவர் கருணாநிதியிடம் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply