தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் சேருவது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால் முன்னாள் பிரதமரின் மருமகள் ஒருவரே கட்சி மாறியுள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மருமகள் கருணா சுக்லா நேற்று காங்கிரஸில் சேர்ந்துள்ளார். இது பாரதிய ஜனதா கட்சியிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகன் அவர்களின் மனைவி கருணா சுக்லா சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்ச்கீர் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி.யாக இருந்தவர். மேலும், அம்மாநில பா.ஜ.க. மகளிரணி துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். வாஜ்பாய் அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர் கருணா சுக்லாவை கட்சி மதிக்கவில்லை என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன் பாரதிய ஜனதாவில் இருந்து விலகினார்.

பாரதிய ஜனதாவில் இருந்து விலகி சிறிது காலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருந்த சுக்லா, நேற்று திடிரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடப்போவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply