மரியான் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. இந்த படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்துர் என்ற பாலிவுட் நடிகை நடிக்கிறார்.
அனேகன் படத்தில் தனுஷ் சென்னையை சேர்ந்த சேரிப்பையனாக நடிக்கிறார். கராத்தே வீரராக நடிக்கும் தனுஷ், இந்த படத்தில் இதுவரை இல்லாத வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ராவணன் படத்திற்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகர் கார்த்திக் தனுஷுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் செய்தி. கார்த்திக் இதுவரை வில்லனாக நடித்ததே இல்லை. வில்லனாக நடித்தாலும், மங்காத்தா படத்தில் அஜீத் ஏற்றது போன்ற மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் கார்த்திக்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் இசை ஹாரீஸ் ஜெயராஜ். இந்த படத்திற்காக நான்கு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம்.

Leave a Reply