இந்த தீபாவளிதான் கார்த்திக்கு நிஜமான தலை தீபாவளி. இந்த தீபாவளிக்குத்தான் அவர் நடித்த “ஆல் இன் ஆல் அழகு ராஜா” வெளியாகிறது. அவருக்கு முதல் தீபாவளி படம் இதுதான்.
எனவே முன் எப்போதும் இல்லாத உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்த ஆண்டு தீபாவளியை எதிர் கொள்கிறார் கார்த்தி.
இந்த தீபாவளி உங்களுக்கு ஸ்பெஷல் தானே?
“நான் எத்தனையோ தீபாவளியை பார்த்திருக்கிறேன்.இந்த தீபாவளி எனக்கு நிச்சயமாக
ஸ்பெஷல்தான். இப்போதுதான் இந்த ஆண்டு தான் எனக்கு தீபாவளி ரிலீஸ் படம் வருகிறது. அதனால் மனசுக்குள் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் காத்துக் கொண்டிருக்கிறேன்.
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கார்த்தி கூறும் போது
சமீப நாட்களாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் கார்த்தி. விஷ ஜுரத்திலிருந்து இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். தீபாவளிக்கு வெளிவரவுள்ள படமான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ பற்றி கேட்க ஆரம்பித்து விட்டாலே உடல் சோர்வை மறந்து மனதில் உற்சாகம் சிறகடிக்க பேசத் தொடங்கி விடுகிறார்.
“அது ஒரு மறக்க முடியாத படம். ஜாலியான அனுபவம். உற்சாகமான எனெர்ஜி கொடுத்த எக்ஸ்பீரியன்ஸ்” என்று ஒபெனிங் கொடுக்கிறார்.
“நானும் ராஜேஷும் சந்தித்தபோது நகரம் சம்பந்தப்பட்ட கதை வேண்டாம். கிராமத்துப் பக்கம் போவோம் என்று விரும்பினோம். அது சற்று வளர்ந்த ஊர். ஸ்மால் டவுன் என்று கூறலாம். அதன்படி கதையின் பெரும்பகுதி அம்பாசமுத்திரத்தில் நடக்கிறது. அங்கே ‘ஆல் இன் ஆல்’ என்கிற லோக்கல் சேனல் நடத்தும் அழகுராஜா தான். இந்த
அழகுராஜா தன்மீது அதிகமாக நம்பிக்கை வைத்து அலைபவன். அந்த லோக்கல் சேனலை சன்டிவிக்கு  போட்டியாக கருதி வளர்த்து வருகிறான் என்றால் பாருங்களேன்.

Leave a Reply