shadow

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா கார்த்திக் நரேன்?

‘துருவங்கள் 16’ என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அந்த படத்தால் பெரும் பாராட்டுக்களை பெற்றார். அதன் பின்னர் அவர் இயக்கிய 2வது படமான ‘நரகாசுரன்’ படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள 4வது படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை ‘வீரம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

கார்த்திக் நரேன் மற்றும் சிம்பு இணையவுள்ள இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் மற்றும் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply