shadow

இயக்குனர் கார்த்திக் நரேன் கடந்த 2016 ஆம் ஆண்டு ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின்னர்’மாஃபியா’, ’நரகாசுரன்’ போன்ற படங்களை இயக்கினார்.

இந்த நிலையில் தனுஷ், மாளவிகா மோகன் நடித்த ’மாறன்’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் நரேன் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் அதர்வா மற்றும் ரகுமான் நடிக்க உள்ளனர். இதில் ரகுமான் மட்டும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும்