பாரதிராஜா வீட்டில் கார்த்தி, சூரி, கருணாஸ்: வைரல் புகைப்படம்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடிகர் கார்த்தி, சூரி, கருணாஸ் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ’விருமன்’ படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டம் சின்னமனூர் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது

அங்கு உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் கார்த்தி, சூரி, மற்றும் கருணாஸ் ஆகியோர்களுடன் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே பாரதி இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.