shadow

60 மதிப்பெண் பெற்றதால் தற்கொலை முயற்சி. மறுகூட்டலில் 100 மதிப்பெண்
marks
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைக்கும் என ஆசையுடன் எதிர்நோக்கிய ஒரு மாணவி இந்தி மொழிப் பாடத்தில் வெறும் 60 மதிப்பெண்  மட்டுமே கிடைத்ததால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே மாணவி மறுகூட்டலில் 100 மதிப்பெண்கள் எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீலமங்களா என்ற பகுதியை சேர்ந்த தண்யஸ்ரீ என்ற 10ம் வகுப்பு மாணவி, ஹிந்தியில் 60 மதிப்பெண்கள் எடுத்திருந்ததாக அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த மதிப்பெண் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு இரவுபகலாக கண்விழித்து படித்திருந்த தண்யஸ்ரீ, 60 மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது தாயார் உரிய நேரத்தில் அவரை காப்பற்றிவிட்டார்.

இந்நிலையில் தண்யஸ்ரீ மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். அதில் தண்யஸ்ரீயும் அவரது தாயும் அதிர்ச்சி அடையும் வகையில், 100க்கு 100 மதிப்பெண்களை அவர் பெற்றிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் தாய் செய்தியாளர்களிடம் கூறியபோது, எனது மகளின் விடைத்தாளை திருத்தியது யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவர் மீது கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply