8 தொகுதிகளில் பாஜக முன்னிலை: எடியூரப்பா ஆட்சியின் ஆபத்து நீங்கியது

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் பாஜக வென்றால் மட்டுமே எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பிக்கும் என்ற நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு இந்த 15 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே பாஜக 8 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது

இதனால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி ஆட்சிக்கு ஏற்பட்டு இருந்த ஆபத்து நீங்கி விட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில் முடிவுகள் மாற வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இறுதி முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply