இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது: எடியூரப்பா ஆட்சி தப்பிக்குமா?

கர்நாடக மாநிலத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி சமீபத்தில் கவிழ்ந்தது. 15 எம்எல்ஏக்கள் திடீரென குமாரசாமி ஆட்சிக்கு வாபஸ் பெற்றதால் அவரது ஆட்சி கவிழ்ந்து, பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. தற்போது அங்கு எடியூரப்பா முதலமைச்சராக இருந்து வருகிறார்

இந்த நிலையில் கட்சி தாவிய 15 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்த 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த 15 தொகுதிகளில் எடியூரப்பா தலைமையிலான பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவருடைய ஆட்சி நீடிக்கும் நிலையில் உள்ளது. இல்லையேல் மீண்டும் கர்நாடக அரசியலில் குழப்ப நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது

எடியூரப்பாவின் பாஜக ஆட்சியை பதவி இறக்கிய தீர வேண்டும் என்ற நோக்கத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply