கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பா? சபாநாயகர் திடீர் ஆலோசனையால் பரபரப்பு

கருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பா? சபாநாயகர் திடீர் ஆலோசனையால் பரபரப்பு

ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டு அதற்கு இன்னும் முடிவு தெரியாமல் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கும் நிலையில் கருணாஸ் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனபாலுடன், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுக கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. பதவியில் உள்ள கருணாஸ் முதல்வரை அவதூறாக பேசியது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சபாநாயகர் தனபாலுடன் தற்போது சட்டத்துறை மந்திரி சி.வி.சண்முகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை செய்துள்ளனர்.

இதுகுறித்து கருணாசுக்கு விரைவில் பதிலளிக்கப்படும் எனவும், அதன் பிறகு அவர் மீதான நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்.எல்.ஏ. கருணாசின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply