’கர்ணன்’ படத்தில் நடித்த குதிரைக்கு என்ன ஆச்சு?

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படத்தில் நடித்த குதிரை எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது.

’கர்ணன்’ படத்தில் தனுஷ் அடிக்கடி ஒரு குதிரையில் வருவார் என்பதும் அந்த குதிரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

அந்த குதிரை தற்போது இறந்துவிட்டதை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சோகத்துடன் குதிரையுடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மாரி செல்வராஜ் பதிவு செய்த இந்த டுவிட்டை அடுத்து ரசிகர்கள் அந்த குதிரைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.