shadow

a8315a52-2c2d-4404-ab45-6213a2833b36_S_secvpf.gifதி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரியை கட்சியில் இருந்து நீக்கிய திமுக, அவருடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும், மீறி அவருடன் தொடர்பு கொண்டால் அவர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் திமுக தலைமை எச்சரிக்கை செய்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை மு.க.அழகிரி தயாளு அம்மாள் அவர்களை சுமார் ஒருமணி நேரம் சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் பேசி முடித்ததும், கனிமொழியின் வீட்டுக்கு சென்று அவரிடம் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

யாரும் அழகிரியுடன் தொடர்பு கொள்ள கூடாது என்று கட்டளையிட்ட பின்னரும் கனிமொழி மு.க.அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது திமுகவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கனிமொழியும் ஸ்டாலின் எதிர்ப்பளராக இருப்பதால் அழகிரியுடன் அவர் அணி சேருவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும் என்று கனிமொழியும், கூட்டணி வேண்டாம் என ஸ்டாலினும் கூறிவந்தனர். ஆனால் ஸ்டாலின் ஆலோசனைப்படி திமுக தலைமை தனித்து போட்டியிடுகிறது. இதனால் கனிமொழி ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்டாலினுடன் கருத்துவேறுபாடுள்ள அழகிரியும், கனிமொழியும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக

Leave a Reply