‘கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: கனிமொழி

‘கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும்: கனிமொழி

தமிழகத்தில் கிட்டத்தட்ட 95% ஆத்திக கொள்கையுடன் கடவுள் நம்பிக்கையுடன் இருந்து வரும் நிலையில் திமுக தொடர்ந்து நாத்திகம் பேசி வருவதால் நடுநிலையான வாக்காளர்களான பொதுமக்கள் திமுகவுக்கு ஓட்டு போட தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் வெளிப்படையாக நாத்திகம் குறித்து கனிமொழி எம்பி பேசியுள்ளது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை எம்பியுமான கனிமொழி, ‘கருணாநிதியின் மவுனம் கூட நாத்திகம் பேசும் என்றும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், திமுக நாத்திகம் பேசுவதை நிறுத்தாது என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார். இந்த பேச்சால் திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தனது கடவுள் மறுப்பு கொள்கையை மாற்றி கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, திக போல் வெளிப்படையாக அதுகுறித்து பேசாமல் இருப்பதே அக்கட்சிக்கு நல்லது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.