shadow

திமுகவில் சேர்ந்த ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டதால் நடிகர் ராதாரவி எந்த அணியிலும் இருக்க விரும்பாமல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்தபோது அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசியபோது, ‘பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டு கருத்து கூறியிருந்தார். அவரது பேச்சைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்

இந்த பேச்சுக்கு தற்போது பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் பேச்சு பேச்சு மனித தன்மையற்றச் செயல் எனவும் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பயனாளிகள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ராதாரவியின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

‘மாற்றுத்திறனானிகள் குறித்து இகழ்ச்சியாகப் பேசுவதை, ராதாரவி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதைக் கருணாநிதியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது ஒரு சிறிய தடைதான். மன ஊனம் தான் தாண்ட முடியாத தடை. மாற்றுத்திறனாளிகள், மன ஊனத்தை உடைத்தவர்கள்’ எனக் கூறியுள்ளார்.

திமுகவில் இணைந்த நடிகர் ராதாரவிக்கு திமுகவின் முக்கிய புள்ளியே எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply