shadow

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 10 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது

இந்த நிலையில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்கள் பேரிடர் நேரத்தில் எனது அலுவலக அவசர எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அவசர உதவி எண் என்று 9176437040 என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது