shadow

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 நடிகை திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா 3 என்ற திரைப்படத்தில் வேதிகா ஓவியா நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய நான்கு நடிகைகள் நடித்து இருந்தனர்

இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்பவர் கோவாவில் திடீரென தற்கொலை செய்து கொண்டார் அவருக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனை அடுத்து ரஷ்யாவில் இருக்கும் அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸ் படத்தில் நடித்த நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது