சென்னை காசிமேட்டில் வசித்து வந்த புகழேந்தி என்பவர் புற்று நோய் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தார். புகழேந்தி சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தார்.
கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாத அவரது மனைவி புவனேஸ்வரி தனது இரண்டரை வயது குழந்தையைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டது காசிமேடு பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புவனேஸ்வரிக்கு வயது 23தான் ஆகிறது. கணவன் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்று அவர் இத்தனை நாட்களும் சாப்பிடாமல் கொள்ளாமல் அழுது புலம்பியதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற புவனேஸ்வரி குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Leave a Reply