shadow

ஏப்ரல் 29-முதல் கமலின் அடுத்த படம் தொடக்கம்
kamalshruthi
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் அவருடைய அடுத்த படம் உடனே தொடங்கப்படும் என்று கூறப்பட்டாலும் ஆறு மாதங்கள் ஆகியும் வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே இதுவரை நடந்து வந்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா வரும் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆக்சன் மற்றும் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கவுள்ளார். முதல்முறையாக நடிகை ஸ்ருதிஹாசன் கமலின் மகளாக நடிக்கவுள்ளார்.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் பல நகரங்களில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்று தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply