மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராஜினாமா செய்த முதலமைச்சர் ஆவேசம்

மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராஜினாமா செய்த முதலமைச்சர் ஆவேசம்

மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில், திடீரென ராஜினாமா முடிவை கமல்நாத் எடுத்துள்ளார்.

கடந்த 15 மாதங்களில் மாநில வளர்ச்சிக்காக பல திட்டங்களை தீட்டியதாகவும், கடந்த 15 மாதங்களில் நான் என்ன தவறு செய்தேன் என்றும் கேள்வி எழுப்பிய கமல்நாத், மத்திய பிரதேச மக்கள், பேராசைக்காரர்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

15 மாத காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பாஜக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply