21 நாள் ஊரடங்கு பெருமுதலாளிகள் மட்டுமே உதவும்: கமலஹாசன்

21 நாள் ஊரடங்கு பெருமுதலாளிகள் மட்டுமே உதவும்: கமலஹாசன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கூட வரவேற்று உள்ளன.

இந்த நிலையில் கமலஹாசன் இந்த அறிவிப்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் அறிவிப்பு என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;

உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்.

Leave a Reply