shadow

தமிழகம் ஊழலில் பீகாரை மிஞ்சிவிட்டது. கமல் காட்டமான அறிக்கை

ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் 30% வரியை எதிர்த்து திரைத்துறையினர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இன்று மூன்றாவது நாளாக திரையரங்குகள் மூடப்பட்டு வேலைநிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சர்களை திரையுலகினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் அரசிடம் இருந்து இன்னும் அதிகாரபூர்வ ஆணை எதுவும் வெளிவரவில்லை

இந்த நிலையில் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் திரைப்படம் எடுப்பது, திட்டமிட்டே கடினமாக்கப்பட்டு உள்ளது. இன்னும் பல சித்திரவதைகளையும், ஊழல்களையும், திரைத்துறை இந்த ஆட்சியின் கீழ், சகித்துக் கொள்ள உள்ளது.

இப்பிரச்னையை பொறுத்தவரை, திரைத்துறையினருடன் ஒற்றுமையாக செயல்பட முயற்சிக்கிறேன். அதே வேளையில், சுயநலமிக்க அரசியல்வாதிகளிடம் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. பக்கத்து மாநிலங்களில், ஜி.எஸ்.டி., வரியை கருத்தில் கொண்டு, கூடுதல் வரிகளுக்கு விலக்கு, சலுகைகள் அளித்துள்ளனர். தமிழகத்தில் நடக்கும் ஊழலில், திரைத்துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கியுள்ளன. இந்த விஷயத்தில், பீகார் மாநிலத்தை, தமிழகம் முந்தி விட்டது. இதற்கு எதிராக, இன்னும் வலுவான போராட்டத்தை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply