இதையாவது புரியும் படி சொல்லியிருக்கலாமே! ‘தர்பார்’ வசன நீக்கம் குறித்து கமல் கூறியதற்கு கிண்டல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தில் இருந்து சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய வசனமான, ‘பணம் இருந்தால் சிறையில் உள்ளவர்கள் கூட ஷாப்பிங் செல்லலாம்’ என்ற வசனம் நேற்றுமுதல் நீக்கப்பட்டது

இந்தநிலையில் இந்த வசனம் நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கமலஹாசன் இது குறித்து கூறிய போது கூறியதாவது: ’பராசக்தி காலத்தில் இருந்தே கருத்துரிமை பிரச்சினை உள்ளது, தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங்தான்

இந்த கருத்தின் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்றும் இதையாவது புரியும்படி சொல்லி இருக்கலாமே என்றும் கமல்ஹாசனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்

Leave a Reply