கமல்-ரஜினி திடீர் சந்திப்பு! அரசியலில் கூட்டணியா?

கமல்-ரஜினி திடீர் சந்திப்பு! அரசியலில் கூட்டணியா?

திரையுலகில் நாற்பது ஆண்டுகாலம் நண்பர்களாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருமே அரசியலுக்கு வரவுள்ள நிலையில் இருவரும் தனித்தனியே அரசியலுக்கு வருவார்களா? அல்லது சேர்ந்து வருவார்களா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி அரசியலுக்கு வருவதை ரஜினி உறுதி செய்தார். கமல் அரசியலுக்கு விரைவில் வரவுள்ளதாக கூறினாலும், இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ரஜினி, கமல் இருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு என்பதால் இந்த சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பேசி இணைந்து அரசியல் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply