முதல்வருக்கு கமல்ஹாசன் கேள்வி

தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் ஏற்கனவே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என உத்தரவிட்ட நிலையில் தமிழகம் இன்னும் ஏன் ஊரடங்கு உத்தரவை நீடிக்கவில்லை என கமலஹாசன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்

உங்களுடைய எஜமானரின் உத்தரவுக்காக தாங்கள் காத்திருக்கின்றீர்களா? என்றும் மக்களின் குரலாக கேட்கின்றேன், உடனே ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உங்கள் பதவியின் அதிகாரத்தை காப்பாற்றுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவர் தனது இன்னொரு டிவிட்டில் கூறியதாவது ‘அண்டை மாநிலங்கள் சில கோவிட் 19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத்தட்டிவிடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் பெறும் நேரமல்ல, மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *