தரமணி’ என்ற படத்திற்காக ஆண்ட்ரியா எழுதிய பாடலை நேற்று வெளியிட்டு பேசிய கமல்ஹாசன், சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே விடுவது தவறு இல்லை என்று பேசினார்.

இயக்குனர் ராம் இயக்கும் ‘தரமணி’ என்ற படத்திற்காக அந்த படத்தில் ஹீரோயின் ஆண்ட்ரியா ஒரு பாடலை எழுதி, இசையமைத்து பாடியும் இருக்கிறார். இந்த ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் பாடலை வெளியிட இயக்குனர் இமயம் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் ” நான் என்னுடைய சொத்து முழுவதையும் வைத்து ரிஸ்க் எடுத்து படம் எடுப்பதாக பலர் பேசுகின்றனர்.  ஒரு விவசாயிக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. அதுபோல எனக்கு சினிமாவை தவிர வேறு எதுவும் தெரியாது. நான் சினிமாவுக்கு வரும்போது எதையும் கொண்டு வரவில்லை. அதுபோல நான் போகும்போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை. என்னுடைய முதலீடு நான்தான்.  மேலும் ஆண்ட்ரியா திறமையான நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த பாடகி, இசையமைபாளர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்து வருகிறார். இந்த படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று பேசினார்.

மேலும் பாரதிராஜா பேசும்போது கமலுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு குறித்து விரிவாக பேசினார். இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/MDZLIi” standard=”//www.youtube.com/v/BpIJ5wTTMTA?fs=1″ vars=”ytid=BpIJ5wTTMTA&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9592″ /]

Leave a Reply