பாஜகவில் ரஜினி-கமல்-விஜய். பொன்.ராதாகிருஷ்ணன் – கமல் சந்திப்பு இதன் அச்சாரமா?

பாஜகவில் ரஜினி-கமல்-விஜய். பொன்.ராதாகிருஷ்ணன் – கமல் சந்திப்பு இதன் அச்சாரமா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்த தமது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் பிரபல அரசியல்வாதிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பாமக கே.பாலு கமல்ஹாசனை சந்தித்தார்.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகத்திற்கு நேரில் சென்ற கமல்ஹாசன், அவரை சந்தித்து ஆலோசித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இந்த சந்திப்பின் பின்னால் முக்கிய விஷயங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாஜக தமிழகத்தில் காலூன்ற ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரையும் கட்சியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் ஒரு படிதான் இந்த சந்திப்பு என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.