shadow

ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவருடன் கமல்ஹாசன் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் கடந்த இரண்டு வருடங்களாக எந்த படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை என்றாலும் தனது பெயரை மக்க மறக்காமல் இருக்கும் வகையில் பரபரப்பான அரசியல் கருத்துக்களை அவ்வப்போது டுவிட்டரிலும், நேரடி பேட்டியிலும் கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு தமிழக அமைச்சர்களிடம் இருந்து மிரட்டல் வருவதும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பதுமாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்தவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பரும், தமிழக ஆம் ஆத்மி தலைவருமான வசீகரன் நேற்று கமல்ஹாசனை திடீரென சந்தித்து பேசினார்

இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தமிழக அரசியல் நிலை குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாகவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அனுமதியின் பேரிலேயே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக கமல்ஹாசன் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழக ஆம் ஆத்மி தலைவர் அவரை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply