கமலஹாசன் கேள்வி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றும்போது 20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இது ஒரு பெரிய கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

வழக்கம்போல் கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *