shadow

இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகி அல்ல: காவிரி பிரச்சனை குறித்து கமல்

நேற்று சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சனை குறித்த இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டு இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டு வரைவு செயல்திட்டத்தையும் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

எனினும் இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தான் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்தேன். எங்களை முன்நிறுத்தி அல்ல. புதிய கட்சி தங்களை முன்னிறுத்திக் கொள்ள இந்த கூட்டத்தை நடத்துவதாக அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

எங்களுடைய எண்ணம் நாளை தமிழக விவசாயிகளின் நல்வாழ்வுக்கான திட்டங்களை தீட்டுவதில், முயற்சியில் நாங்களும் பங்கு பெற்றோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள தானே தவிர நாங்களே இதை முன் நடத்தினோம் என்ற பெருமையை தேடிக்கொள்ள அல்ல. 40 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கிடைத்துள்ள இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாகி விடாது.

கர்நாடகா-தமிழகத்திற்கு இருக்கும் பிரச்சினை மட்டுமல்ல. விவசாயிகளுக்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகளுக்கு குரல் எழுப்ப அவர்களும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Leave a Reply