கமல்ஹாசனின் இந்த மறைமுக செய்தி யாருக்கு/

பெரியார் – ரஜினிகாந்த் விவகாரம் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ’வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒன்றை, அவரின் புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளது. இந்த பதிவு ரஜினிக்கா? அல்லது அவரை எதிர்த்து விமர்சனம் செய்பவர்களுக்கா? என்பது புரியவில்லை.

வழக்கம்போல் கமல்ஹாசன் நேரடியாக ஒரு கருத்தை தெரிவிக்காமல் புரியாத வகையில் சொல்லியிருக்கின்றாரே என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

Leave a Reply