தேர்தல் பிரச்சார மேடையில் ஒரு சிலர் கமல்ஹாசனிடம் பாட்டு பாடி நடிக்க சொல்லியபோது நான் இலவசமாக நடிக்க மாட்டேன் டிக்கெட் வாங்குங்க அதன்பிறகு நடிக்கிறேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கோவையில் டாக்டர் மகேந்திரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசனிடம் திடீரென சதிலீலாவதி படத்தில் வருவது போல் கொங்கு தமிழில் பேசுங்கள் என்று சிலர் கூறினார்கள்

ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்த கமல்ஹாசன் என்னுடைய நடிப்பை பார்க்க வேண்டுமென்றால் தியேட்டர் உள்ளது, அல்லது யூடியூபே பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு நான் நடிக்க மாட்டேன் அப்படி நடிக்க வேண்டுமென்றால் டிக்கெட் வாங்குங்கள் என்று கூறினார்

Leave a Reply