விஜயகாந்துடன் கமல் திடீர் சந்திப்பு

விஜயகாந்துடன் கமல் திடீர் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களையும் பிரபலங்களையும் சந்தித்து வரும் நிலையில் சற்றுமுன்னர் அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதுவும் ஒரு நட்புரீதியிலான, மரியாதை நிமித்த சந்திப்பு என்று கமல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு பின்னர் கமல் கூறியதாவது: எனக்கும் ரஜினிக்கும் அரசியலுக்கு முன்னோடி விஜயகாந்த் அவர்கள்தான். இது உண்மை. அவரை நேரில் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் நட்பு முறையில் சந்தித்தேன்.

திராவிட அரசியலை நிச்சயம் பாதுகாப்பேன். ஆன்மீக அரசியலா? அல்லது பகுத்தறிவு அரசியலா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மக்களுக்கு எது நல்லது என்பது தெரியும்’ என்று கமல் கூறினார்.

Leave a Reply