shadow

தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் அல்ல, இறுதி விருதும் அல்ல: கமல்ஹாசன்

தளபதி விஜய்க்கு சமீபத்தில் சிறந்த நடிகருக்கான விருதை விகடன் அறிவித்தது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக கொடுக்கப்பட்ட இந்த விருது விழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய்க்கு நடிகர் கமல்ஹாசன் விருதினை அளித்தார். இந்த விருதினை வழங்கிய பின்னர் கமல்ஹாசன் கூறியபோது, ‘தம்பி விஜய்க்கு இது முதல் விருதும் இல்ல இதோட நிக்கபோறதும் இல்ல. பல கலைஞர்கள் விருது வாங்கும் மேடையில் என் தம்பியும் விருது வாங்குவது மிக மகிழ்ச்சி என்று கூறினார்.

மேலும் இதே மேடையில் வரும் 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும், சுற்றுப்பயண விபரங்களை வரும் 18ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.

Leave a Reply