shadow

சல்மான்கான் நிகழ்ச்சியில் முதன்முறையாக கமல்ஹாசன்

கமல்ஹாசன் ஏற்கனவே தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் நிலையில் தற்போது சல்மான்கான் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

சல்மான்கான் தொகுத்து வழங்கும் `தஸ் கா தம்’ என்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாகவும், திரையில் இருவரும் இணைந்து தோன்ற இருப்பது இதுவே முதன் முறை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் தனது ‘விஸ்வரூபம் 2’ படத்தை புரமோஷன் செய்யவுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply