எதிர்பாராததை எதிர்பாருங்கள்; பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தார் பிரபல நடிகை

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருகு பதில் ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி அல்லது ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள புரமோ வீடியோவில் கமல்ஹாசனும், ரம்யா கிருஷ்ணனும் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள்

கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தும், ரம்யா கிருஷ்ணன் ஸ்டுடியோவில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.