கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று ஹைதராபாத் சென்று இருந்த நிலையில் நேற்று இரவு அவர் சென்னை திரும்பினார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்

இன்று காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் ஆனால் அவர் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன