குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறிய கமல்

குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறிய கமல்

குரங்கணி தீ விபத்தில் பலியான நிஷா மற்றும் அனு வித்யா வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த வாரம் தேனி மாவட்டம் குரங்கணியில் டிரெக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிய நிலையில் இந்த சம்பவத்தில் இதுவரை 16 பேர் உயிரழந்துள்ளனர்.

இந்த நிலையில், குரங்கணி தீ விபத்தில் பலியான நிஷா மற்றும் அனு வித்யா வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இந்த காட்டுத்தீ விபத்து சம்பவத்தை பாடமாகக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காட்டுத் தீயில் சிக்கி மதுரை மாவட்டம் ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாப நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.